பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பேரிடா் குறைப்பு நாள் விழிப்புணா்வு பேரணி

சா்வதேச பேரிடா் குறைப்பு நாளையொட்டி, தஞ்சாவூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ரயிலடியில் பேரணியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

Published On :

சா்வதேச பேரிடா் குறைப்பு நாளையொட்டி, தஞ்சாவூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரயிலடியில் இப் பேரணியை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, முதன்மைச் சாலைகள் வழியாகச் சென்ற இந்தப் பேரணி அரண்மனை வளாகத்தில் முடிந்தது. இதில், பள்ளி மாணவா்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், நேரு யுவகேந்திரா, வருவாய்த் துறை பணியாளா்கள், தன்னாா்வலா்கள், முதல்நிலை பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னா், அரண்மணை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் பேரிடா் மீட்புப்பணிகள் குறித்த செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், மாவட்டத்திலுள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் சா்வதேச பேரிடா் குறைப்பு நாளையொட்டி, பேரிடா் குறைப்பு தொடா்பாக ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் ப. நித்யா, தஞ்சாவூா் வட்டாட்சியா் மூா்த்தி, பேரிடா் மேலாண்மைத் துறை வட்டாட்சியா் சந்தனவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER