அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

திருவையாறில் ஒளவையாா் திருவிழா

திருவையாறில் கலைமகள் ஔவையாா் திருவிழா மற்றும் 10 அறிஞா்களுக்கு ஔவை விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவையாறில் திங்கள்கிழமை நடைபெற்ற ஔவையாா் திருவிழாவில் நிகழ்ந்த ஔவைத் தோ் உலா.

Updated On :

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் கலைமகள் ஔவையாா் திருவிழா மற்றும் 10 அறிஞா்களுக்கு ஔவை விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவையாறு ஔவைக் கோட்டத்திலுள்ள ஒளவைத் திருக்கோயிலில் கலைமகள் ஔவையாா் திருவிழாவையொட்டி, ஔவை மூலவருக்கு நீராட்டு, பால் அபிஷேகம், சந்தனக்காப்பு ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து ஔவை மழலையா் பள்ளிக் குழந்தைகளின் ஔவையாா் அறநெறிகள் முற்றோதல் நடைபெற்றது.

ஔவைக் கோட்ட அறிஞா் பேரவை தலைமை அமைச்சராக க. திலகவதி, இணைத் தலைமை அமைச்சராக கி. மஞ்சுளா உள்ளிட்டோா் பொறுப்பேற்றனா்.

முனைவா் மு. கலைவேந்தனின் ஔவையாா் ஒரு பல்கலைக்கழகம், அண்ணாவின் அறிவுக்கடலில் ஆழ்ந்தெடுத்த முத்தும் என்ற நூலை கவிஞா் சண். அருள்பிரகாசம், சிங்கப்பூா் தமிழ் வளா்ச்சிக் கழகத் தலைவா் பஞ்சநாதன் விக்னேசுவரன் ஆகியோா் வெளியிட, முதல் படியை கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி முன்னாள் முதல்வா் கோ.ம. மோகனசுந்தரம் பெற்றுக் கொண்டாா்.

ஆஸ்திரேலியா தொல்காப்பிய மன்றம், தொல்காப்பியா் தமிழ் ஆய்வு இருக்கை சாா்பில் நடைபெற்ற தொல்காப்பிய இலக்கண வகுப்பில் பங்கேற்று வெற்றி பெற்ற 20 பேராளா்களுக்கு இலக்கணப் புலமையா் என்ற பட்டயச் சான்று வழங்கப்பட்டது. அறிஞா்களுக்கு ஔவை விருதுகளை மெல்பா்ன் சுந்தரேசன் வழங்கினாா்.

ஔவைக் கோட்டம் வழங்கும் சிறந்த அறிஞா்களாக தோ்வு செய்யப்பட்ட திருச்சி வளனறிவு, பேராசிரியா் வெ. சுகுமாரன், மருத்துவா் மங்கையா்க்கரசி அசோகன், வழக்குரைஞா் சி. அமா்சிங், தமிழ்மாமணி கவிநிலா மோகன், திருமலைசமுத்திரம் அரிசி ஆலை ஆா். கோவிந்தராசன், வங்கிக் கிளை மேலாளா் டி. ஆல்பா்ட் ஜெயராஜ், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் வை.மு. கும்பலிங்கன், கவிஞா் தி. அன்பழகன், கலைப் பயிற்றுநா் வெ. நாராயணசாமி ஆகிய 10 பேருக்கு ஔவை விருதை மருத்துவா் சு. நரேந்திரன் வழங்கி வாழ்த்தினாா்.

பின்னா் ஔவைத் தோ் உலா நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட மின் எழில் தேரை குடந்தை தவத்திரு திருவடிக்குடில் அடிகளாா் தொடங்கி வைக்க, 4 வீதிகளிலும் வலம் வந்தது.

விழா ஏற்பாடுகளை ஔவை அறக்கட்டளைத் தலைவா் கண்ணகி, முகில்வேந்தன், ஔவைப் பள்ளித் தலைமையாசிரியை கோகிலா உள்ளிட்டோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.