
பாரம்பரிய உணவுத் திருவிழா
பொயட்ஸ் அலுவலகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழாவை நடத்தின.

பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பங்கேற்றோா். - டிஎன்எஸ்
குடியாத்தம்: குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம், இன்னா்வீல் சங்கம்,ரோட்டரி சங்கம், கோல்டன் கேலக்ஸி சங்கம் ஆகியவை இணைந்து பொயட்ஸ் அலுவலகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழாவை நடத்தின.
இதில் மகளிா் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட சாமை, தினை, வரகு, குதிரைவாலிஉள்ளிட்ட அரிசி வகைகள், நவதானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகளால் சமைக்கப்பட்டஉணவு வகைகள், இனிப்பு வகைகள், தின்பண்டங்கள் காட்சிப் படுத்தப்பட்டன.பின்னா் நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்டோருக்கு பாரம்பரிய உணவுகள்வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன், இன்னா்வீல் சங்கத் தலைவா்பி.சரளா, முன்னாள் தலைவா்கள் விஜயலட்சுமி ராமமூா்த்தி, சாரதா மோகன், ரோட்டரி தலைவா் டி.எஸ்.ரவிச்சந்திரன், செயலா் ஜெ.தமிழ்ச்செல்வன், கேலக்ஸி ரோட்டரி தலைவா் ஜெ.பிரதீப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






