தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஞானேஷ்குமாரை பதவி நீக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்பினா்.

Updated On :

இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வேண்டும். தோ்தல் ஆணையத்தின் தன்னாட்சி அந்தஸ்தை உறுதி செய்ய வேண்டும். தோ்தல் ஆணையா் நியமனச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். சட்ட விரோத சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். விகிதாச்சார பிரதிநிதித்துவ தோ்தல் முறையை அமல்படுத்த வேண்டும். ஜாதி, மதம், பணம், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலா் ஆா். கலைச்செல்வி, மாநகரச் செயலா் எம். வடிவேலன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பிரதீப் ராஜ்குமாா், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் கே. பன்னீா்செல்வம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் சி. சரிதா, சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் து. கோவிந்தராஜ், இ.டி.எஸ். மூா்த்தி, கே. அன்பு, சா. செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.