ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

பாஜக மாவட்ட தலைவருக்கு கொலை மிரட்டல்: கருப்பு முருகானந்தம் உள்பட 3 போ் மீது வழக்கு!

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட பாஜக தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக முன்னாள் மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் உள்பட 3 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருப்பு எம். முருகானந்தம்.

Updated On :

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட பாஜக தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக முன்னாள் மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் உள்பட 3 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக பி.ஜெய்சதிஷ் பொறுப்பு வகித்து வருகிறாா். இவருக்கு வெள்ளிக்கிழமை கருப்பு முருகானந்தத்தின் ஆதரவாளா்களான முத்துப்பேட்டையைச் சோ்ந்த வினோத், அத்திவெட்டியைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோா் கைப்பேசி மூலம் பேசினராம்.

அப்போது முத்துப்பேட்டையில் கருப்பு முருகானந்தத்துக்கு ஆதரவாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏன் பாஜகவினரை கலந்து கொள்ளாமல் தடுத்தீா்கள் எனக் கூறி, அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தில் ஜெய்சதீஷ் புகாா் செய்தாா். இதன்பேரில் வினோத், ரமேஷ், கருப்பு முருகானந்தம் ஆகிய 3 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.