ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் சனிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

கைது

Updated On :

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் சனிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் கீழவாசல் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஏ. சுந்தா் (42). தனியாா் நிறுவன காவலாளி. இவா் 8 மாத கா்ப்பிணியாக இருந்த தனது மனைவி காயத்ரியிடம் தாய் வீட்டுக்கு சென்று பணம், இருசக்கர வாகனம் வாங்கி வர வேண்டும் எனக் கூறினாா்.

இது தொடா்பாக 2018, ஏப். 17-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் காயத்ரியின் தலைமுடியை சுந்தா் பிடித்து சுவரில் மோதினாா். இதனால், பலத்த காயமடைந்த காயத்ரி தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சுந்தரை கைது செய்தனா். இந்த வழக்கு தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவில் நீதிபதி ஏ. தீபா, சுந்தருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் ஆய்வாளா் கே. மணிகண்டன், அரசு வழக்குரைஞா் கே. சுகன்யா, நீதிமன்றத் தலைமைக் காவலா் ரதிதேவி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.