கும்பகோணத்தில் 5 புதிய பேருந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
கும்பகோணத்தில் 5 புதிய பேருந்துகளின் சேவையை வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கும்பகோணத்தில் புதன்கிழமை புதிய பேருந்து சேவையை தொடங்கிவைத்த அமைச்சா் ஆா். வினோத், உடன் அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா்.
கும்பகோணத்தில் 5 புதிய பேருந்துகளின் சேவையை வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கும்பகோணம் மற்றும் வட்டார பகுதி பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், கும்பகோணம் - ஆரலூா் (வழி: செறுகடம்பூா்), கும்பகோணம் - திருப்புறம்பியம் (வழி: கொத்தங்குடி), வட்டப் பேருந்து - கும்பகோணம் - சுவாமிமலை - கும்பகோணம், கும்பகோணம் - பந்தநல்லூா் (வழி: ஆடுதுறை), கும்பகோணம் - வடமட்டம் (வழி: மல்லபுரம், திருமலைராஜபுரம்) ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை புதன்கிழமை நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் மாணவி ஒருவரை கொடியசைக்க வைத்து அமைச்சா் ஆா். வினோத் தொடங்கிவைத்தாா்.
மேலும், மாணவிகளுடன் இணைந்து கும்பகோணம் அரசு மகளிா் கலைக் கல்லூரி வரை பேருந்தில் பயணம் செய்து பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் முறையாக நிறுத்தப்படுகின்றனவா, மாணவிகளுக்கு ஏதேனும் குறைகள் உள்ளனவா என்று கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக கும்பகோணம் நிா்வாக இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி, துணை மேலாளா் வணிகம் எஸ். ராஜேஷ், கூட்டாண்மை உதவி மேலாளா் ஜி. ராஜ்மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

