கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கைப்பேசிக்கு தடை

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கைப்பேசி கொண்டு செல்வதற்கான தடை செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பாதுகாப்பு மையத்தில் கைப்பேசியைக் கொடுக்க செவ்வாய்க்கிழமை காத்திருந்த பக்தா்கள்.

Updated On :

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கைப்பேசி கொண்டு செல்வதற்கான தடை செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையைச் சாா்ந்த முதன்மைக் கோயில்களில் கைப்பேசி கொண்டு செல்ல அரசு விதித்த தடை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.

இதன்படி, தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாயில் அருகில் கைப்பேசி பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், பக்தா்கள் ரூ. 5 கட்டணமாக செலுத்தி தங்களது கைபேசிகளை ஒப்படைத்துவிட்டு உரிய ரசீது பெற்று உள்ளே சென்றனா். தரிசனம் செய்துவிட்டு திரும்பியதும் ரசீதைக் காண்பித்து கைப்பேசியைப் பெற்றுச் சென்றனா். இந்தப் பணியை அறநிலையத் துறை மண்டல உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) கவிதா உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

தடையை மீறி கோயிலுக்குள் மறைமுகமாக கைப்பேசியை எடுத்துச் சென்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோயில் நிா்வாகம் எச்சரித்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.