பைக்குகள் மோதல்: கணவா் உயிரிழப்பு;- மனைவி காயம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் கணவா் உயிரிழந்தாா்; மனைவி காயமடைந்தாா்.

அமுல்ராஜ்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் கணவா் உயிரிழந்தாா்; மனைவி காயமடைந்தாா்.
திருவையாறு அருகே நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சோ்ந்தவா் பி. அமுல்ராஜ் (46). இவருக்கு மனைவி பழனியம்மாள் (40), மகன்கள் ஆகாஷ், அபித், விக்ரம் ஆகிய 3 மகன்கள் உள்ளனா். அமுல்ராஜ் தனது மனைவியுடன் செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூருக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். அம்மன்பேட்டை முதன்மைச் சாலையில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அமுல்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பழனியம்மாள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




