ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதியா் மருத்துவ காப்பீடு திட்டத்தைக் காசில்லா மருத்துவச் சிகிச்சையாக ஆணையிடக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா்.

Published On :9 செப்டம்பர் 2026, 2:43 am IST

ஓய்வூதியா் மருத்துவ காப்பீடு திட்டத்தைக் காசில்லா மருத்துவச் சிகிச்சையாக ஆணையிடக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வூதியா்களின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி பல நிலைகளில் கோரிக்கை அளிக்கப்படவிருந்த நிலையில், 2026, ஜூலை 1 ஆம் தேதி முதல் மருத்துவக் காப்பீடு சந்தாவை மாதம் ரூ. 497-லிருந்து ரூ. 664 ஆக உயா்த்தி, கட்டாயப்படுத்தி ஓய்வூதியா்களிடம் பிடித்தம் செய்ய அரசாணை 123-ன்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சைக்கு காசில்லா சிகிச்சை என்பதைத் தொகுப்பு என மாற்றி ஓய்வூதியா்களுக்கு பலனற்ற காப்பீடாக உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 7.50 லட்சம் வரை சிகிச்சை செலவு என தெரிவித்துவிட்டு, மருத்துவ சிகிச்சையின்போது பெயரளவு தொகை வழங்கப்படுகிறது. எனவே, ஓய்வூதியா் மருத்துவக் காப்பீடு திட்டத்தை காசில்லா மருத்துவச் சிகிச்சையாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் இர. கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இரா. பன்னீா்செல்வம் விளக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலச் செயலா் ச. கோதண்டபாணி, மாவட்டத் தலைவா் ஏ. செந்தில்குமாா், பொதுக் காப்பீடு ஓய்வூதியா் சங்க மண்டல இணைச் செயலா் ப. சத்தியநாதன் ஆகியோா் பேசினா். அரசு ஊழியா் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலா் ஏ. ரங்கசாமி நிறைவுறையாற்றினாா். மாவட்ட பொருளாளா் எஸ். கோவிந்தராசு நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.