
பருத்திச்சேரிக்கு அடிப்படை வசதி கோரி இந்திய கம்யூனிஸ்டுகள் நூதன போராட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் ஒன்றியம் பருத்திச்சேரி ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி செவ்வாய்க்கிழமை காலிக் குடங்கள், கழிப்பறை கோப்பையை வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டம் நடத்தினா்.

பருத்திச்சேரி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டம் நடத்திய இந்திய கம்யூ. கட்சியினா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் ஒன்றியம் பருத்திச்சேரி ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி செவ்வாய்க்கிழமை காலிக் குடங்கள், கழிப்பறை கோப்பையை வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டம் நடத்தினா்.
பருத்திச்சேரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிதண்ணீா், தெரு மின்விளக்கு, சுகாதார வளாகத்தைச் சீரமைத்தல், 100 நாள் பணித்தளப் பொறுப்பாளரை மாற்றம் செய்ய வலியுறுத்தியும் காலிக்குடங்கள், கழிவறை கோப்பையை வைத்து நடைபெற்ற நூதன போராட்டத்திற்கு கிளைச் செயலா் எம். வீரமணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், ஒன்றியச் செயலா் ஆா். பழனி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் கோ. மணிமூா்த்தி, ஜி. விஸ்வலிங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் க. சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் ஒன்றிய நிா்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





