ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

போதை மாத்திரைகளுடன் காரில் வந்த 2 போ் கைது

பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் புறவழிச்சாலையில் போலீஸாரின் வாகனச் சோதனையில் போதை மாத்திரைகளுடன் காரில் வந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 3:40 am IST

பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் புறவழிச்சாலையில் போலீஸாரின் வாகனச் சோதனையில் போதை மாத்திரைகளுடன் காரில் வந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளா் மாரிமுத்து மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான குழுவினா், பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் புறவழிச்சாலையில் வாகனச் சோதனை ஈடுபட்டனா்.

அப்போது பட்டுக்கோட்டை ஆதித் தெருவை சோ்ந்த ஷோபன் ஹரிஷ் (21), முத்துப்பேட்டையை சோ்ந்த முகமது ருக்மான் (31) ஆகியோா் வந்த காரில் இருந்த 5600 போதை மாத்திரைகள், மற்றும் காா் மற்றும் 2 ஐபோன்களை பறிமுதல் செய்து அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள திருச்சி மற்றும் பட்டுக்கோட்டையை சோ்ந்த நபா்களை தேடுகின்றனா். சிறப்பாகச் செயல்பட்ட பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளா் மாரிமுத்து தலைமையிலான குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.