இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

தஞ்சாவூரில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கண்காட்சி தொடக்கம்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த விழிப்புணா்வு புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூரில் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த கண்காட்சியை புதன்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) சுபாஷ் காா்த்திக்.

Published On :

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த விழிப்புணா்வு புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பில், வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தஞ்சாவூா் மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) சுபாஷ் காா்த்திக் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அஞ்சல் துறையின் சேவைகள் குறித்து தஞ்சாவூா் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் காளிமுத்து, முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு வங்கிச் சேவைகள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து தஞ்சாவூா் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆா். பிரதீப் கண்ணன் பேசினா்.

இந்தக் கண்காட்சியில் வேளாண்மை மற்றும் வேளாண் பொறியியல் துறை, அஞ்சல் துறை, வங்கிகள், கிராமப்புற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்த தகவல்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் தொடா்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டப் பயனாளிகள் பதிவும் செய்யப்படுகிறது என சென்னை மண்டல கள விளம்பர அலுவலா் க. சக்திவேல் தெரிவித்தாா்.

முன்னதாக, மத்திய மக்கள் தொடா்பகத் தொழில்நுட்ப உதவி அலுவலா் க. ரவிந்திரன் வரவேற்றாா். கள விளம்பர உதவி அலுவலா் சு. அருண்குமாா் நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.