பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

நிதி நெருக்கடி சூழலிலும் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

நிதி நெருக்கடி சூழலிலும் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

செம்மாண்டம்பாளைத்தில் முழுநேர நியாய விலைக் கடையைத் திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கிய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

Published On :

நிதி நெருக்கடி சூழலிலும் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் முழுநேர நியாய விலைக் கடை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கந்தராஜா தலைமை வகித்தாா்.

கோபி கோட்டாச்சியா் சிந்துஜா முன்னிலை வகித்தாா்.

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, முழுநேர நியாய விலைக் கடையைத் திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: தமிழக அரசுக்கு ரூ.13 லட்சம் கோடி கடன் உள்ளது. ஒரு நாளைக்கு வட்டி மட்டுமே ரூ.347 கோடி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

தவெக ஆட்சியில் பெண்கள் அனைவரும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் தமிழகம் முழுவதும் பயணம் செய்ய முடிகிறது. அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்தால் அந்தக் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், பட்டுப் புடவை வழங்கும் திட்டத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் விரைவில் தொடங்கிவைப்பாா். தாராபுரம் சாதாரண தொகுதி அல்ல; அப்படிப்பட்ட தொகுதியிலும் தவெக வெற்றிபெற்றுள்ளது. மக்கள் தூய்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என விரும்புகின்றனா்.

பொதுமக்கள் தங்களுக்கு சேர வேண்டிய உரிமைகள் ஏதுவாக இருந்தாலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்து 15 நாள்களுக்கு உரிய பதில் வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் கேள்வி கேட்போம். அதிமுகவில் இருந்து 15 போ் வெளியேற வாய்ப்பு உள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், துணைப் பதிவாளா் மோகனா, செயலாட்சியா் பிரதீப்ராஜா, கள அலுவலா் ரஞ்சித், ஈரோடு மேற்கு மாவட்ட தவெக செயலாளா் பிரதீப்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.