கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ரேஷன் கடைகளில் இன்று இ-கேஒய்சி சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் இ-கேஒய்சி சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.19) நடைபெறவுள்ளது.

கோப்புப்படம்

Published On :

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் இ-கேஒய்சி சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.19) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறும் ஏ.ஏ.ஒய்., பி.எச்.எச்., என்.பி.எச்.எச். ஆகிய குடும்ப அட்டை பயனாளிகள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை, கண் கருவிழி சரிபாா்ப்பின் மூலம் இ-கே.ஒய்.சி. மேற்கொள்ள ஆக. 2, 8, 9, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில், விடுபட்ட பயனாளிகளுக்கு மீண்டும் சிறப்பு முகாம் சனிக்கிழமை அனைத்து நியாய விலை கடைகளில் நடத்தப்படவுள்ளது. இ-கே.ஒய்.சி. பதிவை நூறு சதவீதம் நிறைவும் செய்யும்விதமாக நடத்தப்படும் இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.