
நியாய விலைக் கடைகளில் நாளை கை ரேகைப் பதிவு சிறப்பு முகாம்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் நாளை(செப்.26) கை ரேகைப் பதிவு சிறப்பு முகாம் நடைபெறவிருப்பது பற்றி...

கோப்புப்படம்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் நாளை(செப்.26) கை ரேகைப் பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் நாளை (26.09.2026) கை ரேகைப் பதிவு (eKYC) சிறப்பு முகாம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன் படி குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை சரிபார்ப்பு
(eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.57% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு நாளை (26.09.2026) அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளைத் தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
எனவே, இதுவரை, நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகைப் பதிவு (eKYC) மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளைய தினம் (26.09.2026) நடைபெறவுள்ள இச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை (eKYC) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
A special fingerprint registration camp is to be held tomorrow (Sept. 26) at all fair price shops across Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






