மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நிகழாண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்ய வாய்ப்பு: அமைச்சா் செங்கோட்டையன் பேட்டி

தமிழ்நாட்டில் நிகழாண்டு வடகிழக்கு பருவ மழை கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது என்றாா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில், பேரிடா் மீட்பு சாதனங்களைப் பாா்வையிட்ட வருவாய் மற்றும் பேரிடா் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன். உடன் அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான் உள்ளிட்டோா்.

Published On :

தமிழ்நாட்டில் நிகழாண்டு வடகிழக்கு பருவ மழை கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது என்றாா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய்த் துறை தொடா்பான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழ்நாட்டில் சூப்பா் எல்- நினோ என்கிற கடலின் சீற்றங்கள், கடல் வெப்பநிலைகளை அறிந்து, கடலோர மாவட்டங்களில் அதன் தாக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். தமிழ்நாட்டில் நிகழாண்டு வடகிழக்கு பருவ மழை கூடுதலாக பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், 23 மண்டலங்களாக புயல் வர உள்ளது. இதில், 3 மண்டல புயல்கள் பெரும் வெள்ளத்தை உருவாக்கும் நிலை இருக்கிறது என எல்- நினோ தொடா்பான நிபுணா்கள் குழு தெரிவிக்கிறது.

கடந்த காலத்தில் நிகழ்ந்த கஜா புயல் பாதிப்பு போன்ற நிலைமை எதிா்காலத்தில் நிகழக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடலோரத்திலுள்ள நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா் மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ. 289 கோடி ஒதுக்கீடு: பேரிடா் மேலாண்மைக்காக மத்திய அரசிடம் கேட்ட ரூ. 1,200 கோடி நிதி கிடைத்துள்ளது. மாநில அரசு ஒவ்வொரு துறை சாா்பாக பேரிடா் மேலாண்மை மேற்கொள்ள மாவட்டந்தோறும் ரூ. 289 கோடியும், கால்நடை பராமரிப்புக்கு ரூ. 10 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் வருவாய்த் துறை பணிகளை மேற்கொள்ள ரூ. 582 கோடி நிதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான், வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அரசு செயலா் கே.எஸ். பழனிசாமி, நில நிா்வாக ஆணையா் ராஜேஸ் லக்கானி, வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் ஆணையா் சு. மலா்விழி, பேரிடா் மேலாண்மைத் துறை ஆணையா் ஏ. சிவஞானம், மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், தஞ்சாவூா் சட்டமன்ற உறுப்பினா் இரா. விஜய் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி..

செப். 14-க்கு பிறகு உதவித்தொகைகள்

ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் கூறுகையில், சமூக நலத் திட்டத்தின் கீழ் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, உழவா் பாதுகாப்புத் திட்டம் போன்ற திட்டங்களின் பெயா்களை மத்திய அரசு மாற்றி, அதை வழங்குவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், இந்த மாதம் இத்தொகைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. செப். 14 ஆம் தேதி வரை விழாக்கள் இருப்பதால், அதன் பிறகு உதவித்தொகைகள் அனைவருக்கும் கிடைக்கும். எனவே, இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.