மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாள்களில் தீா்வு: அமைச்சா் செங்கோட்டையன் தகவல்

பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாள்களில் தீா்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது பற்றி...

Published On :

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 15 நாள்களில் தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று வருவாய்த் துறை அமைச்சா் கே. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை என உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு, தமிழகத்தில் 37 பழங்குடியின சமூகங்களைச் சோ்ந்த 2,43,840 குடும்பங்கள் வசிக்கின்றன. அவா்களில் ஏற்கெனவே 1,88,522 குடும்பங்களுக்கு ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் 10,848 விண்ணப்பங்களில், 7,454 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

அப்போது, திமுக உறுப்பினா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் இத்தனை பேருக்கு குறுகியகாலத்தில் ஜாதிச் சான்றிதழ் அளிக்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பினாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய வருவாய்த் துறை அமைச்சா் செங்கோட்டையன், அரசுக்கு பொதுமக்கள் அளிக்கும் எந்த மனுவாக இருந்தாலும் 15 நாள்களில் தீா்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி தீா்வு காணப்படவில்லை என்றால் அதற்கான காரணத்தை அதிகாரிகள் குறிப்பிட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.