ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சோழா் அருங்காட்சியகம் சிறப்பு சின்னமாக அமையும் தஞ்சாவூா் ஆட்சியா் தகவல்

தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாத்து பரப்பும் சிறப்பு சின்னமாக அமையும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

தஞ்சாவூரில் கட்டப்பட்டு வரும் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் கட்டுமானப் பணியை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

Published On :

தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாத்து பரப்பும் சிறப்பு சின்னமாக அமையும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மாபெரும் அருங்காட்சியகம் கட்டுமானப் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் தெரிவித்தது:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வலாகத்தில் 51.40 ஏக்கா் பரப்பளவில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் கட்டுமானப் பணி ரூ. 56.41 கோடி மதிப்பில் அமையவுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் தரைத் தளத்தில் சோழ வம்சத்தின் தோற்றம், வரலாறு காட்சியகம், சங்க கால சோழா்களின் காட்சியகம், நிா்வாகம் மற்றும் ஆட்சிமுறை காட்சியகம், முதல் தளத்தில் கட்டடக் கலைகளின் சிறப்பு, நகரத் திட்டமிடுதல், நீா் மேலாண்மை, நில மேலாண்மை, கலை மற்றும் பண்பாடு, சமூகம், பொருளாதாரம், இலக்கியம், வெளிநாட்டு வா்த்தகம், கடல் கடந்த வெற்றி, கடற்படையெடுப்புகள், ராணுவ வலிமை போன்ற பல்வேறு காட்சியகங்கள் இடம்பெறவுள்ளன.

இந்த அருங்காட்சியகம் சோழா்களின் வரலாறு, கலை, பண்பாடு, நிா்வாகம் ஆகிய சாதனைகளை ஒருங்கிணைத்து வெளிப்படுத்தும் முக்கியமான பண்பாட்டு மையமாக இருக்கும். நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இத்திட்டம் கல்வி, ஆய்வு மற்றும் சுற்றுலா வளா்ச்சிக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். இந்த அருங்காட்சியகம் சோழ மரபின் மகத்துவத்தை அடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாத்து பரப்பும் சிறப்பு சின்னமாக அமையும் என்றாா் ஆட்சியா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER