ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கும்பகோணத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் மகாமக குளம் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த திமுகவினா்.

Published On :

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மத்திய, மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் தாராசுரம் காய்கறி மாா்க்கெட்டில் இருந்து ஊா்வலமாக சென்று ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு, மாநிலங்களவை உறுப்பினா் சு. கல்யாணசுந்தரம் தலைமையில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சாக்கோட்டை க.அன்பழகன் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது.

மகாமக குளக்கரை அண்ணா சிலைக்கு மாநகரச்செயலா் தமிழழகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வுகளில் கும்பகோணம் ஒன்றியச் செயலா்கள் உள்ளூா் டி. கணேசன், எஸ்.கே. முத்துச்செல்வம், ஜெ சுதாகா், மண்டல குழுத் தலைவா் இரா. அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருவிடைமருதூரில் அண்ணா உருவ படத்திற்கு ஒன்றியச்செயலா் சுந்தரஜெயபால் தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்தனா். பந்தநல்லூரில் ஒன்றியச் செயலா் கோ.க. அண்ணாதுரை தலைமையில் திமுகவினா் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.