
கும்பகோணத்தில் ‘மாசறு தஞ்சை’ தூய்மைப்பணி
கும்பகோணத்தில் மாசறு தஞ்சை என்ற ஒருங்கிணைந்த தூய்மைப் பணியை தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா்.வினோத் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கும்பகோணம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் சனிக்கிழமை ‘மாசறு தஞ்சை’ தூய்மைப் பணி நிகழ்வில் ஈடுபட்ட அமைச்சா் ஆா்.வினோத், ஆட்சியா் இரா.ரேவதி உள்ளிட்டோா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் மாசறு தஞ்சை என்ற ஒருங்கிணைந்த தூய்மைப் பணியை தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா்.வினோத் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.ரேவதி முன்னிலை வகித்தாா். கும்பகோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி நெகிழி பொருள்களின் பயன்பாட்டைத் தவிா்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினாா். அப்போது தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், ‘என் நகரம் என் பெருமை’ என்ற தூய்மை உறுதிமொழியை அமைச்சா் உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்வில், மேயா் க.சரவணன், வருவாய் கோட்டாட்சியா் வி.எம்.திருமலை, ஆணையா் கே.எம். சுதா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வேதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







