கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

வாய்க்கால் அருகே தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே வாய்க்கால் பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

பட்டுக்கோட்டை அருகே வாய்க்கால் பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தவா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை நரியம்பாளையத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் கோவிந்தராசு (60). இவா் கடந்த 6-ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக சாந்தாங்காடு நீா்ப்பாசன வாய்க்கால் அருகே சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து மயக்கமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.