2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

கல்லூரி வாகனம் மோதி காயமடைந்தவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே கல்லூரி வாகனம் மோதியதில் காயமடைந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சுப்பையாபுரம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் குருநாதன் (25). பால் வியாபாரம் செய்து வந்தாா். கடந்த 9 ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் சுப்பையாபுரம் - தேசியம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அய்யனாா் கோயில் பகுதிக்கு சென்றபோது எதிரே வந்த கல்லூரி வாகனம், இவரது இருசக்கர வாகனம் மீது மோதியதாம்.

இதில் காயமடைந்த குருநாதன், தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.