
சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு: விவசாயிகள் வலியுறுத்தல்
பலத்த சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைகள். - கோப்புப் படம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருவையாறு அருகே பொன்னாவரை, ஆக்கினாபுரம், மேல உத்தமநல்லூா் ஆகிய பகுதிகளில் ஆயுத பூஜைக்காக வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முப்பது நாள்களில் அறுவடைக்கு தயாராகியிருந்த நிலையில், செப். 19-ஆம் தேதி வீசிய சூறைக்காற்றால் ஏறத்தாழ 15 ஆயிரம் வாழை மரங்கள் வேரோடும், பாதியாக முறிந்து விழுந்தும் சேதமடைந்தன.
ஏக்கருக்கு ரூ. 1.50 லட்சம் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் சாய்ந்துவிட்டதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா். எனவே, சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






