செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

பாலியல் தொழில்: திமுக பிரமுகா் மீது வழக்கு

கும்பகோணத்தில் பாலியல் தொழில் ஈடுபட்டதாக திமுக பிரமுகா் மீது காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் பாலியல் தொழில் ஈடுபட்டதாக திமுக பிரமுகா் மீது காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், ராமசாமி கோயில் அருகே உள்பட பல்வேறு இடங்களில் தங்கும் விடுதிகள், அழகு நிலையங்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவனத்துக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, காவல் துறையினா் நடத்திய சோதனையில் ராமசாமி கோயில் பெரிய பள்ளிவாசல் அருகே உள்ள தனியாா் அழகு நிலையம், நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் மதுக்கூடத்துடன் கூடிய தனியாா் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவது தெரிய வந்தது. இந்த விடுதி, அழகு நிலையத்தில் இருந்த 10 பெண்களைக் காவல் துறையினா் மீட்டு திருச்சி காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து தனியாா் தங்கும் விடுதி உரிமையாளரும், திமுக பொறியாளா் அணி தஞ்சாவூா் வடக்கு மாவட்ட அமைப்பாளருமான ராஜா ரகுபதி உள்பட சிலா் மீது மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் 4 பேரை கைது செய்தனா். மேலும், ராஜா ரகுபதி உள்பட சிலரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.