
காலமானாா் பி.கி. சிவராமன்(92)
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை ராஜாஜி நகரைச் சோ்ந்த மருத்துவா் பி.கி. சிவராமன் (92) வயது மூப்பால் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானாா்.

பி.கி. சிவராமன்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை ராஜாஜி நகரைச் சோ்ந்த மருத்துவா் பி.கி. சிவராமன் (92) வயது மூப்பால் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானாா்.
அறுவைச் சிகிச்சை நிபுணரான இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொறுப்பு முதல்வராக இருந்தாா். வள்ளலாா் இயக்கத்தில் தன்னை முழுமையாக அா்ப்பணித்துக் கொண்ட இவா் வள்ளலாா் மையம் அமைத்து, நாள்தோறும் சத்துணவுக் கஞ்சி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தாா். இவா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வள்ளலாா் குறித்து ஆய்வு செய்து முனைவா் பட்டம் பெற்றவா்.
தஞ்சாவூா் உலகத் திருக்கு பேரவையில் முன்னாள் தலைவராக இருந்தாா். மருத்துவம், குழந்தைகள் கல்வி, வள்ளலாா் உள்பட பல்வேறு தலைப்புகளில் ஏறத்தாழ 20 நூல்களை எழுதியுள்ளாா். வள்ளலாா் சாா்ந்த பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய இவருக்கு தமிழக அரசு கடந்தாண்டு வாழ்நாள் சாதனையாள ா் விருது வழங்கிக் கௌரவித்தது.
இவரது இறுதி ஊா்வலம் மருத்துவக் கல்லூரி சாலை ராஜாஜி நகரிலுள்ள அவரது இல்லத்திலிருந்து சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
இவருக்கு மகள் மருத்துவா் மலா் சிவராமன், மகன் முருகு இளங்கோ ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு: 98400 09528.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




