மாணவி மர்மச் சாவு
திருவெறும்பூர் அருகே மாணவி ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார்.


திருவெறும்பூர் அருகே மாணவி ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார்.
திருவெறும்பூர் அருகே வடக்கு காட்டூர் அருந்தியர் தெருவை சேர்ந்தவர் செல்வம் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. இவரது மகள் அன்னக்கிளி (14). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவருக்கு காசநோய் இருந்ததாகவும்,அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அன்னக்கிளி வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்றவர் வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் எழுந்திரிக்கவில்லை.
பெற்றோர்கள் அன்னக்கிளியின் அறைக்குச் சென்று பார்த்த போது, அங்கு அவர் இறந்து கிடந்தார்.
திருவெறும்பூர் போலீஸôர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...