பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

பேரவைத் தேர்தல் அறிவிப்பு: திருச்சியில் தொடங்கியது வாகனத் தணிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திருச்சியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குமேல் வாகனத் தணிக்கை தொடங்கியது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திருச்சியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குமேல் வாகனத் தணிக்கை தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைக்கு மே மாதம் 16-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளளிக்கிழமை பிற்பகல் அறிவித்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து திருச்சி மாவட்டத்திலுள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகளைக் கண்காணிக்கும் வகையில், தொகுதிக்கு 3பேர் வீதம் 9 தொகுதிகளுக்கும் தலா 27 பேர் கொண்ட குழு பறக்கும்படை, கண்காணிக்கும் படை, விடியோ கண்காணிப்புக் குழு ஆகியவற்றுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

சோதனைச்சாவடிகளில் வாகனத் தணிக்கை: தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே வாகனத் தணிக்கையை அலுவலர்கள் தொடங்கிவிட்டனர். மாநகரின் நுழைவுவாயில்களில் அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச்சாவடிகள் மற்றும் மாவட்டத்தின் நுழைவுவாயில்களிலுள்ள சோதனைச்சாவடிகளில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி நகருக்குள் நுழையும் வாகனங்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

தேர்தல் அலுவலர்கள் நியமனம்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமை வகித்து மேலும் பேசியது:

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி அனுமதிகளை வழங்க வேண்டும்.அலுவலர்கள் தங்களது தொலைபேசி எண்களை மற்ற அலுவலர்களுக்கு நியமித்து அவ்வப்போது தொடர்பு கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்ர்.

தேர்தல் அலுவலர்கள் நியமனம்: மாவட்டத்தில் 21,45,201 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி வாரியாக தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்: அவர்கள் விவரம்

மணப்பாறை - மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் டி. ராஜேந்திரன், சிறிரங்கம்- வருவாய்க் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், திருச்சி மேற்கு- திருச்சி கோட்டாட்சியர் எம். கணேஷ்குமார், திருச்சி கிழக்கு- அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் கே.பத்மாவதி, திருவெறும்பூர்- மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.ராஜேந்திரன், லால்குடி- சார் ஆட்சியர் வி.ஜயச்சந்திரபானுரெட்டி, மண்ணச்சநல்லூர்- கலால் உதவி ஆணையர் ஏ. ரங்கராஜ், முசிறி- முசிறி கோட்டாட்சியர் ஆர். சுமன், துறையூர்- தனித்துணை ஆட்சியர் (சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம்) ஆர். கோவிந்தராஜுலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் ஆட்சியர்,.

கூட்ட்ததில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உமா,மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.