எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உலக மன நலன் தின மனிதச்சங்கிலி

உலக மனநல தினத்தையொட்டி திருச்சியில்  கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மனிதச்சங்கிலி  வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 9:57 pm

DIN

உலக மனநல தினத்தையொட்டி திருச்சியில்  கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மனிதச்சங்கிலி  வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி  ஆத்மா மருத்துவமனைகள் மற்றும் இளையோர் எக்ஸ்னோரா இண்டர்நேஷல் ஆகியவை இணைந்து நடத்திய இந்த மனிதச்சங்கிலி பாரதியார் சாலையில் தொடங்கியது. நிகழ்வுக்கு ஆத்மா மருத்துவமனைகளின் இயக்குநர் டாக்டர் கே. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  இளையோர் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் நிறுவனர் பி. மோகன்,  மாவட்ட நூலக அலுவலர் அ. பொ.சிவகுமார்,  குழந்தைகள் நலக்குழுத் தலைவர் இந்திராகாந்தி ஆகியோர் மனிதச்சங்கிலியைத் தொடக்கி வைத்தனர். பாரதியார் சாலை, எல்ஐசி, ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி,  ஜென்னி பிளாசா, தலைமை அஞ்சல் நிலையம்  வரையிலான பகுதி வரை மாணவ, மாணவிகள் மனிதச்சங்கிலியில் நீண்டவரிசையில் கைகோர்த்து  நின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.