மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வாய்க்காலில் இறங்கிப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி   திருச்சி அருகே  புலியூரில்  புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை

Updated On :9 ஏப்ரல் 2018, 2:42 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி   திருச்சி அருகே  புலியூரில்  புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள், விவசாயிகள் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பெண்கள் ஒப்பாரி வைத்துபோராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் வட்டம், புலியூரிலுள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடியுடன்  கிராம பொதுமக்கள், விவசாயிகள் தாரை தப்படையுடன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் அ. நாகராஜன் தலைமை வகித்தார். அப்போது ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வந்த பெண்கள் வாய்க்காலில் அமர்ந்து ஒப்பாரி வைத்து கண்ணீர்மல்க முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில்  முன்னாள் ஒன்றியத் துணைத் தலைவர்  சங்கப்பிள்ளை, முதலைப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர்கள் மகாமுனி, மணிகண்டன், புலியூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சங்கர், திமுக நிர்வாகி நெடுமாறன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.