பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

உலக பாரம்பரியத் தினம்: ரயில் அருங்காட்சியகத்தை பார்க்க அனுமதி இலவசம்

உலக பாரம்பரியத் தினத்தையொட்டி திருச்சி ஜங்சனில் உள்ள ரயில்வே  அருங்காட்சியகத்தை பொதுமக்கள்  புதன்கிழமை ( ஏப்.18) இலவசமாகப் பார்வையிடலாம்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:42 am IST

உலக பாரம்பரியத் தினத்தையொட்டி திருச்சி ஜங்சனில் உள்ள ரயில்வே  அருங்காட்சியகத்தை பொதுமக்கள்  புதன்கிழமை ( ஏப்.18) இலவசமாகப் பார்வையிடலாம்.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பு:  உலக பாரம்பரிய தினம்  உலகம் முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாரம்பரியம் நமது சொத்து என்பது குறித்த விழிப்புணர்வை   சிறுவர்கள் மத்தியில்ஏற்படுத்தும் வகையில் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளை ரயில்வே  அருங்காட்சியகத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை நடத்துகிறது.
மேலும், பாரம்பரிய தினத்தையொட்டி அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர்.   12 வயதுக்குள்பட்ட சிறுவர்கள்  அருங்காட்சியகத்தில் உள்ள சிறுவர் ரயிலில் புதன்கிழமை இலவசமாக செல்வதற்கும் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.