ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ஊர்வசி எடுத்த முடிவு

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் 'பரிமளா & கோ'. இதில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி மாஸ்டர், அனந்திகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

News image
Updated On :31 மே 2026, 2:20 pm IST

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் 'பரிமளா & கோ'. இதில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி மாஸ்டர், அனந்திகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து பாண்டிராஜ் பேசும்போது, 'இந்தக் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு 'பரிமளா ஃபேமிலி' என்ற தலைப்பு வைத்திருந்தோம். பிறகு 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற தலைப்புகள் வந்ததால் மாற்றலாமா என்று யோசித்தோம். 'பரிமளா அண்ட் கோ' என்று வைத்தால் எப்படி இருக்கும் என்று வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் கேட்டேன்.

அவர்கள் இருவரும் இதற்கே ஓட்டுப் போட்டார்கள். ஜெயராம், ஊர்வசி இருவரும் இந்தக் கதைக்குள் வந்ததும், படம் பாதி வெற்றி அடைந்துவிட்டது என்று நினைத்தேன். அவர்கள் இருவரும் கதை கேட்டபோது, தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஜெயராம் உடனே 'இது கண்டிப்பாக பெரிய ஹிட்

ஆகும்' என்றார். அந்த அளவுக்கு அனுபவம் உள்ள இரண்டு கலைஞர்கள் அப்படிச் சொன்னதும் எனக்கு இன்னும் நம்பிக்கை கிடைத்தது.

குறிப்பாக ஊர்வசி ஒரு தனிப்பட்ட துயரம் நடந்திருக்கும் நேரத்திலும், ஷூட்டிங்கை நிறுத்த வேண்டாம், நான் வந்து முடித்துவிடுகிறேன் என்று மறுநாளே வந்து நடித்தார். அது எங்களுக்கு மிகப்பெரிய பலம்.

அந்த மனநிலையில் கூட அவர் நகைச்சுவை காட்சிகளை அற்புதமாகச் செய்தார். இன்று வரை அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போதும் நாங்கள் சிரிக்கிறோம். மிஷ்கினுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. கடந்த சில நாள்களாக புரோமோஷனுக்காக எல்லா இடங்களுக்கும் என்னுடன் வருகிறார். நான் போகும் இடமெல்லாம் பின்னாலேயே வருகிறார். படத்துக்காக வருகிறேன் என்று சொல்வார். அது எனக்கு மிகப்பெரிய அன்பு'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.