உலக பாரம்பரியத் தினத்தையொட்டி திருச்சி ஜங்சனில் உள்ள ரயில்வே அருங்காட்சியகத்தை பொதுமக்கள் புதன்கிழமை ( ஏப்.18) இலவசமாகப் பார்வையிடலாம்.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பு: உலக பாரம்பரிய தினம் உலகம் முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாரம்பரியம் நமது சொத்து என்பது குறித்த விழிப்புணர்வை சிறுவர்கள் மத்தியில்ஏற்படுத்தும் வகையில் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளை ரயில்வே அருங்காட்சியகத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை நடத்துகிறது.
மேலும், பாரம்பரிய தினத்தையொட்டி அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர். 12 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் அருங்காட்சியகத்தில் உள்ள சிறுவர் ரயிலில் புதன்கிழமை இலவசமாக செல்வதற்கும் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

காவல்கார கருப்பு மேக்கிங் விடியோ!

இந்த வாரம் கலாரசிகன் - 31-05-2026

கூடலழகர் கோயில் தேரோட்டம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


