துறையூரில் பக்தி இலக்கிய அறிவுத் திறன் போட்டி

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்காக தமிழ் பக்தி இலக்கியம்,
Updated on
1 min read

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்காக தமிழ் பக்தி இலக்கியம், திருக்குறள், பாரதி பாடல் ஒப்பித்தல் தொடர்பான அறிவுத் திறன் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 போட்டியில் கோட்டாத்தூர், தம்மம்பட்டி, நாமக்கல், நாகநல்லூர், பெரம்பலூர், துறையூர் பகுதிகளைச் சேர்ந்த 37 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
இவர்களில் திருக்குறள் ஒப்பித்த தே. தங்கத்தமிழ், அ. திவான், திருவாசக பதிகம் பாடிய அதியமான், ரக் ஷனா, ஞானரோஷினி, கிருத்திகா, திருமந்திரம் பாடிய குபேரலட்சுமி, அபிநயா, அல்மாஸ், திருப்புகழ் பாடிய இளையரோசா, பிரமோதிதா ஆகியோருக்கு தலா ரூ. 500, பாரதி பாடல் பாடிய மோனிசாவுக்கு ரூ. 300 பரிசளிக்கப்பட்டது. 
போட்டி நடுவராக சசிகலா, சேகர், ரவிக்குமார், சாமிக்கண்ணு ஆகியோர் இருந்தனர். ஏற்பாடுகளை துறையூர் அறுபத்து மூவர் சைவத்தமிழ் அறக்கட்டளைத் தலைவர் சிவத உத்தமன், பொருளர் செ. ரெங்கராஜ் ஆகியோர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com