சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு  தீக்குளிக்க முயன்றவர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:25 am

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட இனாம்ரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் போலாச்சி மகன் சக்திவேல் (45). இனாம்ரெட்டியப்பட்டி ஜெனக மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ள நிலையில், உற்சவ மூர்த்தி திருவீதியுலா தனக்குச் சொந்தமான இடத்தின் வழியாகச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சக்திவேல் வையம்பட்டி போலீஸாரிடம் புகார் அளித்தார். 
போலீஸாரின் சமரச பேச்சுக்கு உடன்படாத சக்திவேல், ஞாயிற்றுக்கிழமை காலை, மணப்பாறையை அடுத்த பாத்திமாமலையில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.
இதைக் கண்ட  போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி வையம்பட்டி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 
விசாரணையில் சக்திவேல், சக்திவேல் திருவிழா பந்தலை அகற்றியதும், ஊர் மக்களைத் தகாத வார்த்தைகளால் பேசியதும் தெரியவந்தது.  அதை மறைக்கவே சக்திவேல் தீக்குளிப்பதாக நடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஊர் முக்கியஸ்தர் அளித்த புகாரின்பேரில் சக்திவேலைக் கைது செய்த வையம்பட்டி போலீஸார் திருச்சி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.