முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

அதிக மகசூல் தரும் வாழைகள் தேவை

குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் வாழை ரகங்களைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என தேசிய வாழை

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:39 am IST

குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் வாழை ரகங்களைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டத்துக்குள்பட்ட போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் பராமரிக்கப்படும் வாழை ரகங்கள், ஆராய்ச்சிப் பணிகளை பார்வையிட்டு நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர்  ஆட்சியர் கு. ராசாமணி கூறியது:
திருச்சி மாவட்டத்தில் இயங்கும் தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவிலும் வாழை விவசாயிகளுக்கு பயன்தரும் வகையிலான ஆய்வுகளை செய்கிறது. இந்திய வாழைகளை விஞ்ஞான முறைப்படி அறுவடை செய்து ஐரோப்ப நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பாராட்டுக்குரியது. குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் வகையிலான வாழை ரகங்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள், அலுவலர்கள், மாணவர்கள் திறம்பட பணியாற்றி மேலும், பல பெருமைகளை சேர்க்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து தொட்டியம் வட்டத்துக்குள்பட்ட ராமசமுத்திரம் கிராமத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் 50 சத மானியத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.