சமூக வலைதளங்களில் காவல்துறை குறித்து அவதூறு பரப்பியதாக சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி அருகே துவாக்குடி அருகே காவல்துறையினரின் வாகனத் தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த உஷா உயிரிழந்தார். இதுகுறித்து துவாக்குடி போலீஸார் மீது அவதூறு பரப்பியதாக, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்த செ. சங்கரலிங்கம் மீது திருவெறும்பூர் போலீஸார் கடந்த மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடிவந்தனர். இது குறித்து இந்திய உள்துறை அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், குவைத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை சிவகங்கை செல்வதற்காக திருவனந்தபுரம் விமானநிலையத்துக்கு வந்தபோது போலீஸாரால் சங்கரலிங்கம் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட போலீஸார் திருவனந்தபுரம் சென்று சங்கரலிங்கத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









