ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

திருக்குறள் போட்டியில் வென்றோருக்குப் பரிசளிப்பு

திருச்சியில் ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தால் நடத்தப்பட்ட திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On :

திருச்சியில் ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தால் நடத்தப்பட்ட திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்சி சிந்தாமணி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிகளில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் இடைநிலைப் பிரிவு, 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மேல்நிலை மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக்  பயிலும் கல்லூரிப் பிரிவு என 3 பிரிவுகளில் சுமார் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு இ.ஆர்.மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சி.ஆர்.மனோகர் தலைமை வகித்தார். ஸ்ரீராம் சிட்ஸ் திருச்சி முதுநிலை மேலாளர் எஸ். மருதுபாண்டி முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  இ.ஆர். மேல்நிலைப் பள்ளித் தலைவர் ஆர்.ராகவன் பரிசுகளை வழங்கினார்.
ஸ்ரீராம் சிட்ஸ் மண்டல மேலாளர் விசுவநாதன், பள்ளி உதவித் தலைமையாசிரியர் எம்.என். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஸ்ரீராம் சிட்ஸ் முதுநிலை மேலாளர் க.திருமுருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.