அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

"திருப்பதிக்கு விரைவில் சுற்றுலாப் பேருந்து'

திருச்சியிலிருந்து, திருப்பதி உள்ளிட்ட  இடங்களுக்கு விரைவில் சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.

Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:15 am IST

திருச்சியிலிருந்து, திருப்பதி உள்ளிட்ட  இடங்களுக்கு விரைவில் சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.
திருச்சியில்  மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 84 லட்சத்தில் மாநகர் முழுவதும் 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அவர் மேலும் கூறியது: 
தமிழகம் சுற்றுலாத் துறையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து கோயில் தரிசனம், தங்குமிடம் உள்ளிட்டவற்றுடன் குறைந்த கட்டணத்தில் 
தினசரி 150 பேர் சென்று வரும் வகையில் சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படுவதைப் போல, திருச்சியிலிருந்தும் விரைவில் இயக்கப்பட உள்ளது. முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வர சாலைகள்  மேம்படுத்தப்படும் என்றார். அமைச்சர் எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, காவல் ஆணையர் அ. அமல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.