சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

திருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.10) நடைபெறுகிறது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.10) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த வேலை வழங்குவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக வருகை தந்து தங்களுக்குத் தேவையான ஆள்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த முகாமில், பல்வேறு தனியார் நிறுவனத்தினர் நேரில் வருகை தந்து, தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தேர்வு செய்யவுள்ளன. 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவர்கள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்கும் நபர்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும். இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெறுவோரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. 
அவர்களது பதிவு மூப்பு விவரங்களும் அப்படியே தொடரும். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். இந்த முகாமானது மாதந்தோறும் ஒரு முறை நடத்தப்படும். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது என மாவட்ட வேலைவாயப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.