எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

முக்கொம்பு கொள்ளிடம் பாலத்தின் தாங்கும்தன்மை குறித்து ஆய்வு

திருச்சி முக்கொம்பு  மேலணை கொள்ளிடம் ஆற்றில் 9 மதகுகள் உடைந்து, அங்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

திருச்சி முக்கொம்பு  மேலணை கொள்ளிடம் ஆற்றில் 9 மதகுகள் உடைந்து, அங்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாலத்தின் தாங்கும்தன்மை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொறியாளர் சர் ஆர்தன் காட்டனால் 1836 ஆம் ஆண்டு திருச்சி முக்கொம்பு மேலணையில் கட்டப்பட்டது கொள்ளிடம் ஆற்றுப் பாலம்.  45 மதகுகளைக் கொண்ட இதன் வழியாக 2005 ஆம் ஆண்டில் 4 லட்சம் கன அடித் தண்ணீரையும் தாங்கி வெளியேற்றியிருக்கிறது. தற்போது, கட ந்த  22 ஆம் தேதி ஆற்றின் 9 மதகுகள் இடிந்து விழுந்தது. அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.   தற்காலிகமாக தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் நிலையில், தற்போது பாலத்தின் தாங்குத்தன்மை குறித்த ஆய்வை பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக  முதல் 5 மதகுகளுக்கு உள்பட்ட பகுதியில் தாங்குத்தன்மை குறித்த உறுதியைக் கண்டறியும் இயந்திரத்தை வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலத்தின் தூண்களின் தாங்குத்தன்மை, பாலத்தின் மற்ற பகுதிகளுக்குப் பாதிப்பு ஏதும் உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆறுக்கு தண்ணீரைத் திருப்பி விடும் பணி :  கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைக்கும் வகையில், ஆற்றின் முன்பகுதியில் பெரிய அளவில் மணல்  திட்டுகளை உருவாக்கும் பணியில் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் காவிரி ஆற்றின் பக்கம் தண்ணீரை திருப்பி விடும் பணி நடைபெறுகிறது. கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் குறையும் என்பதால் சீரமைப்புப் பணிகள் இன்னும் வேகமாகச் செயல்படுத்திட இயலும் என்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
பைபிங் ஆக்சன் முறையில் அடுத்த ஆய்வு:  ஏறத்தாழ 2 லட்சம் கன அடிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்ற போது இடிந்து விழாத மதகுகள் குறைந்த அளவில் 20,000 கன அடி சென்ற போது இடிந்து விழுந்தது ஏன் என்று பலரும்  கேள்வி எழுப்புகின்றனர்.
பொதுவாக அதிகளவில் தண்ணீர் வரும் போது, மதகுகளின் கீழ்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காது. வந்த வேகத்தில் தண்ணீர் சென்றுவிடும். ஆனால், தண்ணீர் குறைந்த போது, மதகுகளின் கீழ்ப்பகுதிக்கு சென்று தண்ணீர் தேங்கி அதன் பின்னர் வெளியேறும் போது,  மதகுகளின் கீழ்ப்பகுதியில் அரிப்பு ஏற்படும். அவ்வாறு அரிப்பு ஏற்படும்போதுதான்  தாங்குத்தன்மையை இழந்து மதகுகள் போன்றவை இடிந்து விழுகின்றன.
எனவே, தற்காலிக தடுப்புகள் அமைக்கும் பணி போன்ற அனைத்தும் முடிந்த பின்னர், எத்தனைஅடி ஆழத்துக்கு அரிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதை கண்டறியும் வகையிலான பைபிங் ஆக்சன் முறையில் அடுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில், அடுத்த நிலையிலான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித் துறையின் உயரதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.