
திருச்சியில் கஞ்சா விற்பனை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருச்சி, உறையூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது, மேல கல்நாயக்கன் தெருவில் மகாராஜா (26) என்பவர் 300 கிராம் கஞ்சா பொட்டலத்தை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி வயலூர் சாலை உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் மா. மகாராஜன் (28). இவர் சாலை ரோடு பகுதியில் சி. மணிவண்ணன் என்பவரை வழிமறித்து தாக்கி அவரிடமிருந்து ரூ. 3,000 ரொக்கத்தை பறித்துச் சென்றதாக வந்த புகாரின் பேரில் உறையூர் போலீஸார் மகாராஜனை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




