
துறையூர் அருகே வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 3, 50, 000 மதிப்பில் புதிய சுகாதார வளாகம் திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் மாணவர் கவியரசன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் வி. ரவிசந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். 6 ஆம் வகுப்பு மாணவி லத்திகா வரவேற்றார். பெருமாள்மலை ரோட்டரி சங்கத் தலைவர் கார்த்திகேயன் சுகாதார வளாகத்தை திறந்து வைத்தும், சங்கத்தின் திட்ட இயக்குநரும், அன்னை மருத்துவமனை நிர்வாகி டி.ஆர். மாதவன் சுகாதார வளாகம் பயன்படுத்தல் மற்றும் அதனை சுத்தமாக பராமரித்தல் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிறைவில் 6 ஆம் வகுப்பு மாணவர் பிரசன்னா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





