செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

ஸ்ரீ வரதராஜ பெருமாள்  கோயிலில் பரமபதவாசல் திறப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு முன்னதாக திருவாராதன் மண்டபத்தில் இருந்த பெருமாளுக்கு ஸ்ரீவிஷ்ணு வராயணம் மற்றும் திருப்பாவை சாற்று முறைகள் நடைபெற்று முடிந்த பின் பரமபதவாசல் வழியாக வரதராஜ பெருமாளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா.. கோவிந்தா.. எனும் கோஷம் முழங்க கோயிலை உலா வந்த பின் வசந்த மண்டபத்தை வந்தடைந்தனர். பின் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஒரே இடத்தில் காட்சி தந்தனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு ஆராதனைகளுக்குப்பின் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று சென்றனர். இதேபோல் அருள்மிகு ஸ்ரீ நல்லாண்டவர் திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி சுவாமி புறப்பாடு, வையம்பட்டி அடுத்த தட்டாரபட்டி ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முசிறி: தொட்டியம் அடுத்த திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள் கோயிலில் கடந்த 10 நாள்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவந்த நிலையில், கோயிலின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், மூலவர் பரமபத வாசல்  வழியாக வந்து பொதும்ககளுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் பரமபத வாசல்  வழியாக சென்று மூலவரான வேதநாராயண பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.