சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குற்றச் செய்திகள்

திருச்சியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர், திங்கள்கிழமை உயிரிழந்தார். 

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

சாலை விபத்தில் முதியவர் சாவு
திருச்சியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர், திங்கள்கிழமை உயிரிழந்தார். 
உறையூர் வைக்கோல்காரத்தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ் (62). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன், தனது இரு சக்கர வாகனத்தில் கே.கே. நகர் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.  காஜாமலை பகுதியில் எதிரே வந்த கார் மோதியதில் அவர் பலத்த காயமடைந்து,  திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார். மாநகர போக்கு வரத்துப் புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


நண்பரை பாட்டிலால் குத்தியவர் கைது: திருச்சி , கோட்டை சங்கரன்பிள்ளை கோயில் தெருவைச் சேர்ந்தவர் சி. முகில்குமார் (20). கீழ சிந்தாமணியைச் சேர்ந்தவர் சசிக்குமார் (20). நண்பர்களான இருவரும் கருத்து வேறு பாடு காரணமாக சில நாள்களாக பேசிக்கொள்வதில்லை. இதனையடுத்து, சசிக்குமார் சக நண்பர்களிடம் கூறியுள்ளார். 
நண்பர்கள் தினேஷ் மற்றும் அலாவுதீன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை பகலில் முகில்குமாரை சிந்தாமணி பகுதிக்கு அழைத்துள்ளனர்.  அங்கு வந்தபோது சசிக்குமாரும் இருந்துள்ளார். நண்பர்கள் கருத்து வேறுபாடு குறித்து பேசியபோது தகராறு ஏற்பட்டதை அடுத்து, மூவரும் சேர்ந்து பாட்டிலை உடைத்து முகில்குமாரை குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
புகாரின் பேரில் கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, சசிக்குமார், தினேஷ் இருவரையும் திங்கள்கிழமை  கைது செய்தனர். அலாவுதீனை தேடி வருகின்றனர். 


செல்போன் பறித்தவர் கைது : திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சி. மதுமிதா (22). இவர் ஞாயிற்றுக்கிழமை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது, அவரது கையிலிருந்த கைப்பையை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பியோடினார். மதுமிதாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த மர்ம நபரை விரட்டிப் பிடித்து புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில் அவர் துவாக்குடி அருகேயுள்ள வாழவந்தான்கோட்டை அகதிகள் முகாமைச் சேர்ந்த பிரபு (22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.