திருச்சியில் மாடிக்குச் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு
திருச்சி செந்தண்ணீர்புரத்தில் பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற முகமூடி நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


திருச்சி செந்தண்ணீர்புரத்தில் பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற முகமூடி நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
செந்தண்ணீர்புரத்தைச் சேர்ந்தவர் சையத்தால்வார். தனியார் கல்லூரியில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி இம்தியாஸ்பானு (45). இவர் செவ்வாய்க்கிழமை வீட்டின் மாடியில் துணிகளை காயவைப்பதற்காக சென்ற போது, முகமூடி அணிந்திருந்த 2 பேர் அங்கு நின்று கொண்டிருப்பதை கண்டு சப்தமிட்டார்.
இதையடுத்து அந்த நபர்கள் இம்தியாஸ் பானு அணிந்திருந்த 5 பவுன் நகைகளையைப் பறித்து சென்றதோடு, வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.50,000-ரொக்கத்தையும் திருடிச் சென்றனர். இதுகுறித்து இம்தியாஸ் பானு அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...