பதினோராவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க 8 ஆவது மாநில மாநாட்டில் கோரிக்கை விடுத்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு சங்கத் தலைவர் கே. பாஸ்கரன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் எஸ். நாகராஜன், தமிழ்நாடு பொதுச் செயலர் டி.எஸ். கணேசன், திருச்சி மாவட்டத் தலைவர் ஆர்.டி. ராமமூர்த்தி, ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலர் வேலாயுதம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் அருணாச்சலம், திருச்சி மாவட்ட வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் நீலகண்டசர்மா, திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலர் ராமராஜ், இந்திய வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் வி. சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொதுத்துறை வங்கிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதிகாரிகளின் பணி நேரம் வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். பதினோராவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகள் மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இமயமலையில் தொலைந்த அணுசக்தி சாதனம்... மிஸ்டர் எக்ஸ் படத்தின் முன்னோட்ட விடியோ!

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

பள்ளிச்சட்டம்பி! வரவேற்பு பெறும் பிருத்விராஜின் சிறப்புத் தோற்றம்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

