திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் ஜூன் 2 ஆவது வாரத்தில் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கு.ராசாமணி, புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜூன் 2 ஆவது வாரத்தில் 2 நாள்களுக்கு கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள், சமுதாயக் கூடங்கள், பொதுத் திடலில் போட்டிகள் நடைபெறும். தடகளம், நீளம் தாண்டுதல், குண்டு, வட்டு எறிதல், கையுந்து, இரு பாலருக்கும் கபடி போட்டிகள், ஆடவருக்கான கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 50 மீ., ஓட்டம், பந்து எறிதல் போட்டி நடைபெறும். இப்போட்டிகளில் பேரூராட்சி, நகர்ப் புறங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கக் கூடாது. மேலும் விவரங்களுக்கு 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா. ராமகிருட்டிணன், விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
36 நாள்களுக்குப் பிறகு... அமைதி திரும்பிய ஜந்தர் மந்தர்!

2 கோல்கள் அடித்த நெய்மர்..! கொண்டாட்டத்தின் மூலமாக விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்த வாரம் கலாரசிகன் - 26-07-2026

திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையாா் கோயிலில் சிக்கிய பெண் பக்தர்!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


