வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இருசக்கர வாகனம் திருடியவர் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை திருச்சி கோட்டை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:25 am

DIN

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை திருச்சி கோட்டை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மரக்கடை ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோ. சீனிவாசன் (30).  இவர் காந்திச்சந்தையில் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார். இவரது இரு சக்கர வாகனம் கடந்த 24-ஆம் தேதி காணாமல் போனது. இது குறித்து அவர் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தேடி வந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி காவிரிக்கரை ஓயாமாரி பகுதியில் உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வகையில் வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர், சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம் தென்கரை வீரகனூர் பகுதியைச் சேர்ந்த க. சிவா (29) என்பதும்,  அவரே, சீனிவாசனின்  இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.