துறையூர் வட்டம் கண்ணனூர் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 192 பேருக்கு சிறு குறு விவசாயிகளுக்கு சான்று அளிக்கப்பட்டது.
முகாமுக்கு முசிறி கோட்டாட்சியர் ஏ. ராஜ்குமார் தலைமை வகித்து 192 பேருக்கு சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கினார்.
முகாமில், துறையூர் வட்டாட்சியர் எஸ். சந்திரகுமார், தோட்டக்கலை உதவி இயக்குநர் சிவராமகிருஷ்ணன், துறையூர் மண்டல துணை வட்டாட்சியர் பெ. மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கண்ணனூர் வருவாய் ஆய்வாளர் பகுதிகளான கண்ணனூர், வடக்குவெளி, சேனப்பநல்லூர், பொன்னுசங்கம்பட்டி, சொக்கநாதபுரம், வி.ஏ. சமுத்திரம், வீரமச்சான்பட்டி, ஆதனூர், நடுவலூர், பகளவாடி, கொட்டையூர், கொல்லப்பட்டி, கலிங்கமுடையான்பட்டி ஆகிய 13 கிராமங்களிலிருந்து சிறு குறு விவசாயிகள் சான்று கோரிய 192 விவசாயிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், சுரேஷ், பன்னீர்செல்வம், சுந்தர், நவநீதன், சிவலிங்கம், விக்னேஷ் உள்ளிட்டோர் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.